வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகையிலையை விற்பனை செய்ய ஆந்திர விவசாயிகளுக்கு அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2024 5:44PM by PIB Chennai

2023-24 பயிர்ப் பருவத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தளங்களில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட  புகையிலையை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 ஆந்திர பிரதேச மாநிலத்தில்  15028.09 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை கருத்தில் கொண்டு வழக்கமான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் கூடுதல் சேவை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 2023 டிசம்பர் 3 ஆம் தேதியில் இருந்து 5  ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் “மைச்சாங்” புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த  மழையால் முக்கிய வயலில் புகையிலையை  மீண்டும் நடவு செய்ய விவசாயிகள் கூடுதல் செலவு செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  அவர் கூறினார்.

ஆந்திராவில், நடப்பு  பயிர் பருவத்தில், 43125 விவசாயிகள் 97127.07 ஹெக்டேர் பரப்பளவில் புகையிலையை பயிரிட்டு 205.5 மில்லியன் கிலோ பயிரை உற்பத்தி செய்தனர். 2023-24 பயிர் பருவத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஏலத் தளங்களில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யவும் சூறாவளி மழையினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும்  மத்திய அரசின் இந்த  முடிவு ஆந்திரப் பிரதேச விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் இந்த முடிவானது எப்சிவி புகையிலை விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

*** 

VK/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2037758) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu