பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேரடி நியமனங்கள் மூலம் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள்

Posted On: 24 JUL 2024 6:19PM by PIB Chennai

67 நேரடி நியமனங்கள்  மூலம் 57 அதிகாரிகள் உள்பட பலர் மத்திய அரசின்  அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர் என்று  பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது இதனை தெரிவித்த அமைச்சர், மத்திய அரசின் இணைச் செயலர், இயக்குநர் மற்றும் துணைச் செயலர் நிலைகளில் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். அவர்களின் சிறப்பு அறிவு மற்றும் நிபுணத்துவத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட நபர்களை  நேரடியாக நியமிக்கும் நடைமுறை  2018 ஆம் ஆண்டு முதல்  முதல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 63 நியமனங்கள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 35 பேர்  தனியார் துறையில் இருந்து தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார். இடஒதுக்கீட்டு முறையில் தகுதிவாய்ந்த நபர்கள் இருப்பின் அவர்கள் மற்ற தகுதி வாய்ந்த நபர்களுடன் நேரடி நியமனத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

*****'

VK/DL


(Release ID: 2037721) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP