கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இடம்பெற்ற மைதாம்கள்

Posted On: 26 JUL 2024 3:58PM by PIB Chennai

அசாம் மாநிலத்தின் சராய்தேவ் பகுதியை பண்டைக்காலத்தில் ஆட்சி செய்த அஹோம் வம்சாவளி மன்னர் குடும்பத்தினரின் உடல் அடக்கம் செய்யப்படும் இடங்கள், மைதாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்கள் தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 புதுதில்லியில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய குழுவின் 46-வது கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள 43-வது தலமாகும். அத்துடன் காசிரங்கா தேசிய பூங்கா, மனாஸ் வன உயிரியல் சரணாலயத்திற்கு பிறகு, அசாமில் இருந்து இடம்பெற்றுள்ள 3-வது பாரம்பரிய தலமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து 13 பாரம்பரிய தலங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிக அளவில் உலக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது.

மைதாம்கள் உலக பாராம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில், நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய இந்த அங்கீகாரம், பாரதத்தின்  பாரம்பரியத்தை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வதில் புதிய இந்தியாவின் அயராத முயற்சிக்கு கிடைத்த நற்சான்று என்றும் திரு ஷெகாவத் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2037495

***

MM/RS/DL


(Release ID: 2037677) Visitor Counter : 103