இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பெருமை தொடர்வதற்கான வீரர்கள், வீராங்கனைகள்

Posted On: 25 JUL 2024 3:38PM by PIB Chennai

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான பயணத்தை இந்தியா தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் நம்பிக்கை, திறமையான, மாறுபட்ட விளையாட்டு வீரர்களின் குழு மீது வைக்கப்பட்டுள்ளது. ஹாக்கி, தடகளம் முதல் குதிரையேற்றம், படகோட்டுதல் போன்ற புதிய துறைகள் வரை, சர்வதேச விளையாட்டு அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் வலிமைக்கும், லட்சியத்திற்கும் இந்திய அணி எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கணிசமான நிதி மற்றும் சிறப்பான தயாரிப்பு திட்டத்தின் ஆதரவுடன், இந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்களுக்காக மட்டுமின்றி, நாட்டின் பெருமைக்காகவும் போட்டியிடுகிறார்கள். இது  அவர்களின் திறனையும் தேசத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

2024 ஒலிம்பிக்கிற்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் ஸ்ரீஜேஷ் பிஆர், ஹர்மன்பிரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சஞ்சய், சுமித், ராஜ் குமார் பால் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

இந்தத் திறமையான அணி வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பெருமையோடும், உறுதியோடும் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஜூடோ, பெண்கள் +78 கிலோ ஜூடோ பிரிவில் துலிகா மான் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கிறார். இந்த சவாலான விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசையில், சக்தியையும், நுட்பத்தையும் ஒருங்கிணைக்க அவர் விரும்புகிறார்.
படகோட்டுதல், ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் பால்ராஜ் பன்வார் பங்கேற்கிறார். இந்த விளையாட்டில் சிறந்து விளங்க அவர் தனது வலிமையையும் சகிப்புத்தன்மையையும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

படகுப் போட்டி: பாய்மரப் படகோட்டுதல் பிரிவில் விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இரு விளையாட்டு வீரர்களும் சர்வதேச போட்டிகளில் திறமையைக் காட்டியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்திய துப்பாக்கி சுடும் குழுவில் மனு பாகர், ஈஷா சிங், ரிதம் சங்வான், அனிஷ் பன்வாலா மற்றும் விஜய்வீர் சித்து போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் துப்பாக்கி சுடும் வீரர்கள் உள்ளனர். இந்த அணியில் ஷார்ப்ஷூட்டர்கள் சிஃப்ட் கவுர் சாம்ரா, அஞ்சும் மௌட்கில், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் பல்வேறு ரைபிள் மற்றும் பிஸ்டல் போட்டிகளில் போட்டியிடுகின்றனர்.

நீச்சல்: இந்தியா சார்பில் திநிதி தேசிங்கு, ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் நீச்சல் போட்டியில் பங்கேற்கின்றனர். இரு நீச்சல் வீரர்களும் தொடர்ந்து தங்கள் நேரத்தை மேம்படுத்தி புதிய சாதனைகளைப் படைக்க நம்பிக்கை கொண்டுள்ளனர்.

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் டேபிள் டென்னிஸ் அணியில் மூத்த வீரர்கள் சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோர் உள்ளனர், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகியோர் பெண்கள் பிரிவுகளில் உள்ளனர். இந்த அணியில் சத்தியன் ஜி, அய்ஹிகா முகர்ஜி ஆகியோர் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

டென்னிஸ்: ரோகன் போபண்ணா, என்.ஸ்ரீராம் பாலாஜி, சுமித் நாகல் ஆகியோர் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்த அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் அந்தந்த பிரிவுகளில் வலுவான செயல்திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

பளுதூக்குதல்: 49 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு பங்கேற்கிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், தனது வலிமையையும், நுட்பத்தையும் வெளிப்படுத்தி மீண்டும் ஒலிம்பிக் மேடையை அடைய தயாராக உள்ளார்.

மல்யுத்தம்: இந்திய மல்யுத்த அணியில் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் போன்ற முன்னணி விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியாவின் வெற்றியைத் தொடரும் நோக்கில் இந்த அணியில் ரிதிகா ஹூடா, நிஷா தஹியா, அமன் ஷெராவத் ஆகியோரும் உள்ளனர், மல்யுத்தத்தில்.

வில்வித்தை: தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத் ஆகியோரைக் கொண்ட இந்திய வில்வித்தை அணி, தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோருடன் ரீகர்வ் நிகழ்வுகளில் போட்டியிடுகிறது.

தடகளம்: இந்தியாவின் தடகள அணியில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட  தனித்துவமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

பேட்மின்டன்: பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் போன்ற நட்சத்திரங்களும், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, தனிஷா கிராஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா, லக்ஷயா சென், சிராக் ஷெட்டி பேட்மின்டன் அணியில் திறமையாளர்களும் உள்ளனர். இந்த வரிசை ஒற்றையர் மற்றும் இரட்டையர் வடிவங்களில் இந்தியாவின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

குத்துச்சண்டை: குத்துச்சண்டை அணியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன்,லோவ்லினா போர்கோஹெய்ன், அமித் பங்கல் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளனர். குத்துச்சண்டையில் இந்தியாவின் பாரம்பரியத்தை இந்த அணி தொடர உள்ளது.

குதிரையேற்றம்: அனுஷ் அகர்வாலா குதிரையேற்றத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கிறார். குதிரையேற்ற விளையாட்டுகளில் நாட்டின் வளர்ந்து வரும் ஆர்வத்தை, இது வெளிப்படுத்துகிறது. இந்தப் பிரிவில் இந்தியாவின் திறனை முன்னிலைப்படுத்துவதை அனுஷ் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

கோல்ஃப் : ககன்ஜித் புல்லர், சுபங்கர் சர்மா, அதிதி அசோக்,தீக்ஷா தாகர் ஆகியோரைக் கொண்ட இந்தியாவின் கோல்ஃப் அணி, ஸ்ட்ரோக்பிளே நிகழ்வுகளில் வலுவான செயல்திறனுடன் சர்வதேச கோல்ஃப் விளையாட்டில் ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவர்களின் திறமை, உறுதிப்பாடு, லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றுடன், இந்திய அணி பாரிஸில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளது.

***

(Release ID: 2036885)

SMB/AG/KR


(Release ID: 2037570) Visitor Counter : 69