இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடுகளுக்காக கேலோ இந்தியா இயக்கத்தின் பங்களிப்பு

Posted On: 25 JUL 2024 4:00PM by PIB Chennai

இந்திய ஒலிம்பிக் இயக்கத்தில் கேலோ இந்தியா திட்டம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த 124 வீரர்கள், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இந்தியா வென்ற 106 பதக்கங்களில் 42 பதக்கங்களை வென்றவர்கள் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் ஆவர்.   2024 பாரிஸ் கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் 25 சதவீதம் பேர் (28 விளையாட்டு வீரர்கள்) கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் ஆவர்.

நாடு முழுவதும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் 323 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1059 கேலோ இந்தியா மையங்கள், 302 அங்கீகாரம் பெற்ற அகாடமிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

'கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 2024-25-ம் ஆண்டில் 187 பேர் பயனடைகின்றனர். 2023-24-ம் ஆண்டில் 173 பேரும், 2022-23-ம் ஆண்டில் 167 பேரும்  பயனடைந்தனர்.

இத்தகவலை மாநிலங்களவையில் 'கேலோ இந்தியா திட்டத்தின் தாக்கம்' குறித்த கேள்விக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036939

***

IR/AG/KR/DL



(Release ID: 2037109) Visitor Counter : 13


Read this release in: Urdu , English , Hindi