சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லி, மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
25 JUL 2024 12:21PM by PIB Chennai
தில்லி, மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், 2024 ஜூலை 19 நிலவரப்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைப் பற்றிய விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தமிழ்நாட்டில் 153, புதுச்சேரியில் 22, ஆந்திரப்பிரதேசத்தில் 131, அசாமில் 215, பீகாரில் 27, சண்டிகரில் 81, சத்தீஷ்கரில் 4, தில்லியில் 2011, கோவாவில் 124, குஜராத்தில் 894, ஹரியானாவில் 28, இமாச்சலப்பிரதேசத்தில் 123, ஜம்மு காஷ்மீரில் 244, ஜார்க்கண்டில் 7, கர்நாடகாவில் 1195, கேரளாவில் 191 என்ற எண்ணிக்கையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மகாராஷ்டிராவில் 2111, மத்தியப்பிரதேசத்தில் 115, லடாக்கில் 19, ஒரிசாவில் 163, பஞ்சாபில் 17, ராஜஸ்தானில் 24, உத்தராகண்டில் 35, உத்தரப்பிரதேசத்தில் 758, மேற்கு வங்கத்தில் 181, மணிப்பூரில் 1, மிசோராமில் 1, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 40, தாத்ரா நாகர்ஹவேலி, டாமன் டையூவில் 25, என்ற எண்ணிக்கையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
வாகன் 4 என்ற மையப்படுத்தப்பட்ட இணையப் பக்கத்தில் இடம்பெறாததால், தெலங்கானா, லட்சதீவு ஆகியவற்றின் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2036676
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2036858)
आगंतुक पटल : 103