உள்துறை அமைச்சகம்
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தொடர்புடையவர்களுக்கு பயிற்சி அளித்தல்
प्रविष्टि तिथि:
24 JUL 2024 5:15PM by PIB Chennai
இந்திய நியாயச் சட்டம், 2023- ன் விதிகள், பிரிவு 106-ன் துணைப்பிரிவு (2), இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம் 2023, முதல் அட்டவணையில் பிரிவு 106 (2) தொடர்பான விதிகள் தவிர, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 2023, ஆகியவை 2024 ஜூலை 1முதல் நடைமுறைக்கு வந்துள்ளன, 2023டிசம்பர்25 அன்று மூன்று சட்டங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே, காவல்துறை, சிறைத்துறை, வழக்குரைஞர்கள், நீதித்துறை, தடயவியல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
காவல்துறை, சிறைத்துறை, வழக்குரைஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகள் ஆகியவற்றின் திறன் மேம்பாட்டிற்காக 13 பயிற்சி கட்டத்திட்டங்களை காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி பகிர்ந்து கொண்டுள்ளது. போபாலில் உள்ள காவலர் பயிற்சிக்கான மத்திய அகாடமி மற்றும் கொல்கத்தா, ஹைதராபாத், சண்டிகர், ஜெய்ப்பூர், காஜியாபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க 'பயிற்சியாளர்களுக்கான பயிற்சி' மாதிரியை இந்த ஆணையம் நடத்தியுள்ளது. இது 274 பயிற்சி வகுப்புகள், இணைய வழி கருத்தரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதன் மூலம் முதன்மை பயிற்சியாளர்கள் உட்பட இதுவரை 43150 அதிகாரிகள், பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் களப்பணியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காவல்துறை, சிறை, தடயவியல், நீதித்துறையைச் சேர்ந்த 8,16,146 பணியாளர்கள் உட்பட 8,40,465 பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளன.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பந்தி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
(Release ID: 2036414)
IR/AG/KR
(रिलीज़ आईडी: 2036790)
आगंतुक पटल : 119