பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்துக்கான ஒதுக்கீடு 73.60 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 24 JUL 2024 1:11PM by PIB Chennai

பழங்குடியினர் நல அமைச்சகத்துக்காக 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட, 73.60 சதவீதம் அதிகமாகும்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த  மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பிரதமரின் பழங்குடியினர் உன்னத கிராம இயக்கம் என்ற  சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். இது பழங்குடியினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான திட்டமாகும். பழங்குடியினர் பெருமளவில் வசிக்கும்  சுமார் 63 ஆயிரம் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம்  5 கோடி பழங்குடியினர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அறிவித்ததற்காக  பிரதமர் திரு நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக அரசின் உறுதிப்பாட்டை  இது எடுத்துக்காட்டுவதாக கூறியுள்ளார்.

கடந்த 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்துக்கு ரூ. 4,497.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது 189.02 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036245

***

IR/RS/KR



(Release ID: 2036280) Visitor Counter : 20