தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் 2024, மே மாதத்தில் 23.05 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்
Posted On:
24 JUL 2024 12:13PM by PIB Chennai
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் (இஎஸ்ஐ) 2024, மே மாதத்தில் 23.05 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
2024, மே மாதத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ், 20,110 புதிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது மேலும் பல தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.
2023-ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2024-ம் ஆண்டு மே மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகமாகும். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 20.23 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்த நிலையில், 2024-ம் ஆண்டு மே மாதத்தில் 23.05 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் மே மாதத்தை விட, 2.82 லட்சம் தொழிலாளர்கள் அதிகமாகும்.
மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2024, ஏப்ரல் மாதத்தில் 16.47 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்த நிலையில், மே மாதத்தில் 23.05 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல், 2024, ஏப்ரல் மாதத்தில் 18,490 புதிய நிறுவனங்கள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள நிலையில், மே மாதத்தில் 20,110 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
புதியதாக பதிவு செய்த தொழிலாளர்களில் 48 சதவீதம் பேர் 25 வயதுவரை உடைய 11.15 லட்சம் பேர் இளம் தொழிலாளர்கள் ஆவர். 2024, மே மாதத்தில் 4.47 லட்சம் பெண் தொழிலாளர்களும், 60 திருநங்கைகளும், பதிவு செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036214
***
IR/RS/KR
(Release ID: 2036243)
Visitor Counter : 104