எஃகுத்துறை அமைச்சகம்
மத்திய பட்ஜெட் குறித்த ஆர்ஐஎன்எல் தலைமை மேலாண்மை இயக்குநரின் கருத்து
Posted On:
24 JUL 2024 12:05PM by PIB Chennai
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் பெரு வணிக நிறுவனமான தேசிய இரும்பு ஆலை நிறுவனம் (ஆர்ஐஎன்எல்) எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் திரு அதுல் பட், மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆந்திராவின் புதிய தலைநகர், போலாவரம் திட்டம், தொழில்துறை முனையங்கள் ஆகியவை ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கான முக்கிய ஏற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த முயற்சிகள் பிராந்தியத்தில் எஃகு நுகர்வை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், கூடுதலாக நகர்ப்புற வீட்டுவசதி, கிராமப்புற உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு, விமான நிலைய மேம்பாடு ஆகியவற்றில் உள்நாட்டு எஃகு நுகர்வை மேலும் அதிகரிக்கும், இது எஃகு தொழிலுக்கு நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்கும். இந்தத் திட்டங்களை ஆதரிப்பதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் ஆர்.ஐ.என்.எல் உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2036204)
PKV/RR/KR
(Release ID: 2036241)
Visitor Counter : 46