கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி

प्रविष्टि तिथि: 22 JUL 2024 1:50PM by PIB Chennai

கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தி, பாதுகாக்க பாடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அயராது பாடுபடும் தகுதிவாய்ந்த கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பால்கர் மாவட்டம் உட்பட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு கலாச்சார அமைப்புகள் / தனிநபர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ள விவரத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034906

***

(Release ID: 2034906)

PKV/KV/KR


(रिलीज़ आईडी: 2034985) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri