பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத்
प्रविष्टि तिथि:
21 JUL 2024 9:15PM by PIB Chennai
ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கார்கில் வெற்றி நாளின் வெள்ளி விழாவை முன்னிட்டு ஜூலை 21, 2024 அன்று பாட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்ட வீர நாரி சம்மான் விழாவில் அவர் பேசினார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நலத்திட்டங்களின் பயன்கள் தகுதியுடையவர்களை உடனுக்குடன் சென்றடையும் வகையில் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய நன்மைகள் கிடைப்பதிலிருந்து ஒருவரும் விடுபட்டுவிடவில்லை என்றும் திரு சஞ்சய் சேத் கூறினார்.
கார்கில் போரில் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஞ்சலி செலுத்தியதுடன், நாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த வீர திருமகன்களை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கும் வணக்கம் செலுத்தினார்.
ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த துணிச்சலான பெண்கள்தான் உத்வேகத்தின் ஆதாரம் என்று குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை இணையமைச்சர், இத்தகைய பெண்களின் தைரியம், உறுதிப்பாடு, அமைதியான தியாகம் மற்றும் தேசபக்தி உணர்வு ஆகியவை எதிர்கால சந்ததியினரிடையே தைரியத்தையும், தேசபக்தியையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.
***
(Release ID: 2034815)
PKV/BR/KR
(रिलीज़ आईडी: 2034853)
आगंतुक पटल : 158