சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லியில் நாளை பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்
Posted On:
21 JUL 2024 9:26AM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கூட்டு பிராந்திய மையங்களின் தேசிய நிறுவனதுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவுக்கு தலைமை தாங்குவார்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் வகையில், பல்வேறு துறைகளில் 70 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேரடியாகவும், மெய்நிகர் ரீதியாகவும் கையெழுத்திடப்படும். இந்த நிகழ்வு 22 ஜூலை 2024 அன்று புதுதில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த ஒத்துழைப்புகள் வெறும் சம்பிரதாயமான ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதியான பலன்களை அளிக்கும் ராஜதந்திர கூட்டணிகளாகும். இந்த முயற்சி மைல்கற்களை நிறுவி, ஒவ்வொருவரும் கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.
***
PKV/DL
(Release ID: 2034753)