சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் கனிம ஆய்வு ஹேக்கத்தானை தொடங்கி வைத்தார்

Posted On: 20 JUL 2024 4:47PM by PIB Chennai

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் புதுமையான கனிம வேட்டை நுட்பங்களை மையமாகக் கொண்ட கனிம ஆய்வு ஹேக்கத்தானை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் திரு. விஜய்குமார் சின்ஹா கலந்து கொண்டார். சுரங்க அமைச்சகத்தின் பிரமுகர்கள், மாநில அரசு அதிகாரிகள், அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹேக்கத்தான் புவி இயற்பியல் தரவுகளுக்கான செயற்கை நுண்ணறிவு  மற்றும் இயந்திர கற்றல்  போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, "தெலுங்கானாவின் புவியியல் மற்றும் கனிம வளங்களின் பார்வை" மற்றும் "தெலுங்கானாவில் உள்ள கனிமங்கள்- ஸ்பாட்லைட்ஸ்" என்ற வெளியீட்டை வெளியிட்டார். இந்த வெளியீடுகள் தெலுங்கானா மாநிலத்தின் புவியியல் அமைப்பு, மாநிலத்தின் கனிம வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

நிகழ்ச்சியின் போது, திரு ஜி கிஷன் ரெட்டி தேசிய மாவட்ட கனிம அறக்கட்டளை  போர்ட்டலையும் தொடங்கி வைத்தார். இந்த வலைதளம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கனிம அடித்தளங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மையப்படுத்தப்பட்ட தளமாகும்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, 24 ஜூன் 2024 தேதியிட்ட என்ஐடி மூலம் தொடங்கப்பட்ட கனிமத் தொகுதிகளின் மின்னணு ஏலத்தின் தொகுப்பு  IV தொடர்பான ரோட்ஷோ நடைபெற்றது . இந்த ரோட்ஷோவின் நோக்கம் தொழில்துறை ஈடுபாட்டை அதிகரிப்பது மற்றும் சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்படும் மின்னணு ஏல செயல்முறையை சாத்தியமான ஏலதாரர்களுக்கு பழக்கப்படுத்துவதாகும்.

 

***

PKV/DL


(Release ID: 2034642) Visitor Counter : 68