குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம் : குடியரசு துணைத்தலைவர்
Posted On:
19 JUL 2024 5:09PM by PIB Chennai
உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர்
திரு ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்பது உணர்ச்சிபூர்வமானது மட்டுமின்றி ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். பருவநிலை மாற்றம் என்பது நலிந்த பிரிவினரைத் தான் பெரிதும் பாதிக்கும் என்பதால் பருவநிலை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். நல்லிணக்கத்துடன், இயற்கையுடன் இணைந்து வாழ்வது பாரதத்தின் நாகரீக வெளிப்பாடு என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி செயல்பாட்டுக்கும், நீடித்த எரிசக்தி தொடர்பான உலகளாவிய தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தார். எனவே பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அனைவரும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034405
***
MM/AG/DL
(Release ID: 2034451)
Visitor Counter : 76