தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 'எதிர்காலம் இப்போது' என்ற கருப்பொருளை வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 19 JUL 2024 9:44AM by PIB Chennai

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் கருப்பொருளான 'எதிர்காலம் இப்போது' என்ற தலைப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று வெளியிட்டார். தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி, ஐஎம்சி 2024 ஆகியவற்றின் இதயத்தில் இந்தியா எவ்வாறு நிற்கிறது என்பதைக் குறிக்கிறது, இது உலகளாவிய தலைவர்கள், தொலைநோக்காளர்கள், முன்னோடிகள் மற்றும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கிறது இன்று நமது உலகை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை ஒத்துழைக்கவும், தீவிரமாக வடிவமைக்கவும் இது உதவுகிறது.

 

மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 செயலி மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்தினார், இது பதிவு செய்வதற்கான தனித்துவமான செயலியாகும்.  திரு ஜோதிராதித்யா எம் சிந்தியாவின் முதல் பதிவு மற்றும் முக்கிய உரையுடன், இது தொடங்கப்பட்டது.

 

தகவல் தொடர்பு அமைச்சர் தனது முக்கிய உரையில், "மக்களை ஒன்றிணைக்கும் போது தொழில்நுட்பம் சிறந்தது. நமது நாடான இந்தியாவை விட இதற்கு சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள பிளவுகளைக் குறைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அவர் வலியுறுத்தினார். "தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை வாய்ப்புகளின் தளத்தை வழங்கும். தகவல்தொடர்பு மற்றும் நெட்வொர்க்குகள் இந்தியாவின் முதல் கிராமத்திலிருந்து இந்தியாவின் மத்திய கிராமங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும்” என்று அவர் கூறினார்.

 

***

(Release ID: 2034204)
PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2034233) आगंतुक पटल : 117
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi