குடியரசுத் தலைவர் செயலகம்
‘நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள், ‘ஆஷோன் கீ உடான், கஹானி ராஷ்டிரபதி பவன் கி, குடியரசுத் தலைவர் மாளிகை: பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது’ ஆகிய நூல்களின் முதல் பிரதிகளைக் குடியரசுத்தலைவர் பெற்றுக்கொண்டார்
प्रविष्टि तिथि:
18 JUL 2024 6:35PM by PIB Chennai
மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானிடமிருந்து, நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள், ‘ஆஷோன் கீ உடான், கஹானி ராஷ்டிரபதி பவன் கி, குடியரசுத் தலைவர் மாளிகை: பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது’ ஆகிய நூல்களின் முதல் பிரதிகளைக் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (18.07.2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், வெளியீட்டுப் பிரிவு இயக்ககம், தகவல் ஒலிபரப்புத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளியீட்டுப் பிரிவு இயக்ககத்தின் இந்த நூல்கள் குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று முறைப்படி வெளியிடப்பட்டது.
'விங்ஸ் டூ அவர் ஹோப்ஸ்' என்ற நூலில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது முதலாம் ஆண்டு காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. 'கஹானி ராஷ்டிரபதி பவன் கி' என்ற நூல் குடியரசுத் தலைவர் மாளிகையின் சுமார் நூறு ஆண்டுகால வரலாற்றை எளிய வார்த்தைகளில் முன்வைக்கிறது. குடியரசுத்தலைவர் மாளிகையின் பல கோணங்களிலான படங்களுடன் கவர்ச்சிகரமான நடையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர்கள் மற்றும் தற்போதைய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆகியோர் பற்றிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
***
SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2034105)
आगंतुक पटल : 97