மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர் கல்விக்கான பாடப்புத்தகங்களை இந்திய மொழிகளில் எழுதுவது குறித்த பயிலரங்கை மத்திய இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் தொடங்கி வைத்தார்
Posted On:
16 JUL 2024 7:36PM by PIB Chennai
உயர் கல்விக்கான பாடப்புத்தகங்களை இந்திய மொழிகளில் எழுதுவது குறித்த துணை வேந்தர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் புதுதில்லியில் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) மற்றும் பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்) ஆகியவை இணைந்து இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, பாரதிய பாஷா சமிதி தலைவர் பேராசிரியர் சாமு கிருஷ்ண சாஸ்திரி; யு.ஜி.சி தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் உட்பட 150-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பயிலரங்கின் துவக்க அமர்வில் பேசிய , டாக்டர் சுகந்தா மஜும்தார், பல்வேறு உயர் கல்வி படிப்புகளுக்கு இந்திய மொழிகளில் பாட புத்தகங்களைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாட்டின் பரந்த மொழி பன்முகத்தன்மையை கல்விமுறை பிரதிபலிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் அறிவை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை- 2020, நாட்டின் இளைஞர்களை தேச கட்டமைப்பில் பங்கேற்க ஊக்குவிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது என்றும் டாக்டர் மஜும்தார் கூறினார்.
இந்திய மொழிகள் தேசத்தின் தொன்மையான வரலாறு மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த ஞானத்திற்குச் சான்றாகும் என்றும் டாக்டர் மஜும்தார் கூறினார். வளமான கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியத்தின் மீதான இளம் தலைமுறையினரின் நம்பிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும், என்றார் அவர்.
இந்த அமர்வின் போது, பேராசிரியர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, பாரதிய பாஷா சூழலியலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். திரு எம் ஜகதீஷ் குமார் சில மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மொழிபெயர்ப்பு மற்றும் கல்விசார் எழுத்து மூலம் இந்திய மொழிகளில் பாட புத்தகங்களை மேம்படுத்தும் அஸ்மிதா, பாகுபாஷா ஷப்த்கோஷ்; மற்றும் நிகழ்நேர மொழிபெயர்ப்பு கட்டமைப்பு ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை பயிலரங்கின் நிறைவு விழாவில், உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033732
******************
PLM/BR/KV
(Release ID: 2033870)
Visitor Counter : 38