எரிசக்தி அமைச்சகம்

தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் தலைமையகத்திற்கு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் சென்றார்

Posted On: 17 JUL 2024 2:37PM by PIB Chennai

மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று (17.07.2024) கொல்கத்தாவில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்குக் கழகத்தின் (டிவிசி) தலைமையகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

இந்த பொதுத் துறை நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், இந்நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள், நிதிப் பிரச்சினைகள் போன்றவை குறித்து விவாதித்தார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு டிவிசி-யின் வளர்ச்சியும், முன்னேற்றமும் முக்கியமானது என்று திரு மனோகர் லால் கூறினார்.

டிவிசி-யின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டிவிசி அதன் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குச் சந்தையில் இறங்கலாம் என்று அமைச்சர் திரு மனோகர் லால் யோசனை தெரிவித்தார்.

***

PLM/KV

 



(Release ID: 2033829) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi