அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகள் கூட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி தொடர்பான "முன் மருத்துவ கட்டமைப்பு வசதியை" மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 16 JUL 2024 4:10PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்  ஆதரவுடன், மண்டல உயிரி தொழில்நுட்ப மையத்தில், தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளின் கூட்டமைப்பின்  கீழ் ஆசியாவின் முதலாவது சுகாதார ஆராய்ச்சி தொடர்பான முன் மருத்துவ வசதியை இன்று தொடங்கி வைத்தார்.

தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு, பிஎஸ்எல் 3 நோய்க்கிருமிகளைக் கையாளும் திறனின் அடிப்படையில் ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை முன் மருத்துவ கட்டமைப்பு ஆய்வகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது உலகில் இதுபோன்ற ஒன்பதாவது கட்டமைப்பு  ஆய்வகமாகவும், ஆசியாவிலேயே  முதல் ஆய்வகமாகவும் திகழ்கிறது. மற்ற ஆய்வகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றில் அமைந்துள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஃபரிதாபாத்தில் இந்த நிறுவனம்  தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பயணத்தை விவரித்தார். 14 ஆண்டுகள் என்ற   குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் பல மைல்கற்களை அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  


இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட கொவிட்   தடுப்பூசி மேம்பாட்டில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா ஒரு முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது என்றும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2033656)

PLM/KV/KR



(Release ID: 2033672) Visitor Counter : 65