இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் வெளியிட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
16 JUL 2024 4:04PM by PIB Chennai
“இந்தியாவுக்கான மின்சார வாகனப் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்ட” அறிக்கையை, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான்பவன் இணைப்புக் கட்டடத்தில் இன்று (16.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூத் வெளியிட்டார். உலகளாவிய வாகனப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்து, எதிர்காலத்திற்கான அதி துல்லிய தொழில்நுட்பத் தேவைகளை அடையாளம் காண ஏதுவாக, இந்த செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4 கட்டங்களாக ஆராய்ச்சித் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது: எரிசக்தி சேமிப்பு செல்கள் (பேட்டரி), மின்சார வாகன மதிப்பீடு, பொருட்கள் மற்றும் மறுசுழற்சி, சார்ஜிங், மறு எரிபொருள் இடுதலுடன், அடுத்த 5 ஆண்டுகளில் தற்சார்பு அடையும் விதமாக இத்துறையில் உலகளவில் முன்னணி நிலையை அடைவதற்குத் தேவையான தெளிவான வழிமுறைகளை வழங்குதல்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய முதன்மை அறிவியல் ஆலோசகர், 2030-க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 45% குறைப்பது என்ற இந்தியாவின் இலக்கை எட்டி, 2047-க்குள் எரிசக்தி சுதந்திரம் அடைவதன் மூலம், 2070-க்குள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லாத நாடு என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். இதன்படி, மின்சார வாகனத்தை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், அவற்றுக்கான எரிசக்தி சேமிப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல், மின்னேற்ற நிலையங்களுக்கு வழங்குவதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விநியோகித்தல் போன்றவை முக்கிய இடம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில், மின்சார வாகன மதிப்புச் சங்கிலி, பெருமளவுக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் பேராசிரியர் அஜய்குமார் சூத் நினைவூட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033653
***
MM/KPG/KR
(रिलीज़ आईडी: 2033671)
आगंतुक पटल : 192