வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஜூரிச் பயணத்தின் முதல் நாளன்று உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர், இந்திய வம்சாவளியினர், சாத்தியமிக்க முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார்
Posted On:
15 JUL 2024 5:59PM by PIB Chennai
இந்தியா – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் பொருளாதார பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஆகியவற்றின் அமலாக்கம் தொடர்பாக மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஜூரிச் பயணத்தின் முதல் நாளன்று, பல்வேறு தொடர் கூட்டங்களில் பங்கேற்றார். உலக வர்த்தக அமைப்பின், தலைமை இயக்குநருடனான உயர்மட்ட கலந்துரையாடல்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல்கள், சாத்தியமான முதலீட்டாளர்களுடனான உரையாடல்கள் மூலம், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான சிறந்த இடமாக இந்தியா திகழ்வது குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுக்களில் ஈடுபட்டார்.
உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் என்கோஸி ஒகோன்ஜோ - இவெலாவுடன் பேச்சு நடத்திய அவர், உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுக்கள், நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
ஜூரிச்சில் உள்ள இந்திய வம்சாவளியினரின் முக்கிய உறுப்பினர்களுடன் அமைச்சர் உரையாடினார். இந்தியா –சுவிட்சர்லாந்து இடையேயான நட்புறவு, சுவிட்சர்லாந்து பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அவர்களுடைய மதிப்புமிக்க பங்களிப்பை அவர் பாராட்டினார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறும் அவர்களை அவர் ஊக்குவித்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
எம்எஸ்சி கார்கோ நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட முன்னணி வர்த்தகர்கள் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களை அவர் சந்தித்துப் பேசினார். பல்வேறு துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், முதலீடுகளை ஈர்ப்பது, இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உகந்த கூட்டாண்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் விவாதித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033433
***
IR/KPG/DL
(Release ID: 2033486)
Visitor Counter : 65