சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி நட்டா ஆய்வு செய்தார்

Posted On: 15 JUL 2024 5:43PM by PIB Chennai

ஆதார அடிப்படையிலான தகவல்கள் மூலம் பல்வேறு உணவு பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து நுகர்வோருக்கும் குடிமக்களுக்கும் அதிகாரம் அளிப்பது முக்கியம் என்றும் அப்போதுதான் நமது பணி முழுமையடையும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமையகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.

குடிமக்களின் நலவாழ்வில் உணவுப் பாதுகாப்பின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டிய அவர், நுகர்வோர்கள், தொழில்துறை மற்றும் தொடர்புடையவர்களுக்கு ஒழுங்குமுறை விவகாரம் மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடத்தை மாற்றத்தை எடுத்துரைக்குமாறும்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை வலியுறுத்தினார். ஒழுங்குமுறை விவகாரங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் போது, உணவுப் பாதுகாப்பின்  நோக்கத்தை அதன் பல்வேறு அம்சங்களில் நுகர்வோர்களுக்கு தெரியப்படுத்துதல்  மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், பல்வேறு பிராந்தியங்கள், மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்களையும்  விருப்பங்களையும் கொண்டுள்ளன. அவர்களுடைய நடத்தைகளை நாம் விரிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது பன்முகத்தன்மை உடையோருக்கு நமது கொள்கைகளை உருவாக்க  உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஜி. கமலா வர்தன ராவ், மத்திய சுகாதார அமைச்சரிடம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் குறித்து விளக்கினார். 2016-ம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு, தான் வந்த போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனைத்து அம்சங்களிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை உணர்ந்தேன் என்று கூறினார். ஒட்டு மொத்த வளர்ச்சி, உணவுப் பாதுகாப்புச் சூழலை வலுப்படுத்துதல், நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல், தொடர்புடையவர்களை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033417 

-----

IR/KPG/DL



(Release ID: 2033476) Visitor Counter : 41