சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'நமது அரசியல் சாசனம், நமது பெருமை' கொண்டாட்டத்தின் மண்டல நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் 16-ம் தேதி நடைபெறுகிறது

Posted On: 14 JUL 2024 9:07AM by PIB Chennai

மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் நீதித்துறையால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும், நமது அரசியல் சாசனம், நமது பெருமை (ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்') கொண்டாட்டத்தின் இரண்டாவது மண்டல நிகழ்வு 2024 ஜூலை 16 அன்று பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் மருத்துவ சங்க மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவை இது நினைவுகூருகிறது. மைகவ் (MyGov) தளத்தில் 2024 ஜனவரி 24 முதல் 2024 ஏப்ரல் 23 வரை நடைபெற்ற இணையதளப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு, இந்த நிகழ்ச்சியின்போது பரிசுகள் வழங்கப்படும்.

மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, 'ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்' தளம் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைக்கப்படும். அரசியலமைப்பு, சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல்களை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு இந்த தளம் அறிவுக் களஞ்சியமாக செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு அருண் பன்சாலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், பிரயாக்ராஜில் உள்ள ராஜேந்திர பிரசாத் தேசிய சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், சட்ட மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்வார்கள்.

'ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்' இயக்கம் புதுதில்லியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 24 ஜனவரி 2024 அன்று குடியரசு துணைத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கம் அரசியலமைப்பு தொடர்பாகவும், சட்ட உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

***

PLM/KV


(Release ID: 2033124) Visitor Counter : 82