பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர்-கதுவா-தோடா பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது - ஜம்மு பகுதியில் சட்ட விரோதச் செயல்கள், தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 13 JUL 2024 6:56PM by PIB Chennai

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள்  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோரை ஒடுக்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்  திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஜம்முவின் கத்துவாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு, குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்பயங்கரவாத சம்பவங்களை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உள்ளூரில் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம், கடந்த பத்து ஆண்டுகளில் உதம்பூர்-கதுவா-தோடா நாடாளுமன்றத் தொகுதியை மிகச் சிறப்பாக மாற்றி அமைத்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் கூறினார். வட இந்தியாவின் முதல் உயிரி தொழில்நுட்ப பூங்கா, விதை பதப்படுத்தும் ஆலைஅடல் சேது பாலம் உட்பட பல பாலங்கள் என பல திட்டங்கள் இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக் பதவிக்காலத்தில் இந்த வளர்ச்சிப் பயணம்  விரைவடையும் என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்

***

 

PLM/KV

 


(Release ID: 2033015) Visitor Counter : 62