உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவு சார்ந்த தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான வட்டமேசை கலந்துரையாடல்: மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தலைமை வகித்தார்
Posted On:
13 JUL 2024 6:39PM by PIB Chennai
மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், இத்துறை சார்ந்த தொழில் நிறுவனத்தினருடன், மும்பையில் இன்று (13.07.2024) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமை வகித்தார்.
புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2024 செப்டம்பர் 19 முதல் 22 வரை நடைபெறவுள்ள உலக உணவு இந்தியா 2024 மாநாடு, கண்காட்சி தொடர்பாகவும் இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. உணவு, அதனைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்கள் கூட்டத்தில் பங்கேற்றன.
கூட்டத்தில் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் பேசுகையில், உலக உணவு இந்தியா 2024-ல் பங்கேற்க இத்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த தொழில்துறை எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையமான எப்எஸ்எஸ்ஏஐ ஏற்பாடு செய்துள்ள உலக உணவு ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்சி மாநாடு செப்டம்பர் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பேசிய துறையின் இணைச் செயலாளர் திரு ரஞ்சித் சிங், இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பதப்படுத்துதல் துறை குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதாகக் கூறினார். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழில்துறை பிரதிநிதிகள், உணவு பதப்படுத்தும் துறையில் இந்திய சந்தை குறித்துத் தங்களது நம்பிக்கையான கருத்துகளை வெளிப்படுத்தினர். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற திட்டங்கள் இத்துறையில் வர்த்தகச் சூழலை மேம்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
***
PLM/KV
(Release ID: 2033009)
Visitor Counter : 65