நித்தி ஆயோக்
2023-24 –ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது -உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும் இந்தியா விரைந்து வளர்ச்சியடைகிறது
Posted On:
12 JUL 2024 7:02PM by PIB Chennai
2023-24 –ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் உலகளாவிய சிக்கல்களுக்கு இடையிலும் இந்தியா விரைந்து வளர்ச்சியடைவது தெரியவந்துள்ளது.
வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், தூய்மை இந்தியா, ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் முத்ரா கடன் திட்டம், ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களும், இயக்கங்களும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.
அனைத்து மாநிலங்களுமே ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன
நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி குறியீட்டு மதிப்பீடு 2023-24 -ம் ஆண்டில் 71 ஆக உள்ளது, இது 2020-21-ம் ஆண்டில் 66 ஆகவும், 2018-ம் ஆண்டில் 57 ஆகவும் இருந்தது.
2023-24-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மதிப்பீடு குறைந்தபட்சம் 57 முதல் அதிகபட்சம் 79 வரை உள்ளது. இது 2018-ம் ஆண்டில் இது 42 முதல் 69 வரை இருந்தது.
2018-ம் ஆண்டுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கும் இடையில், வேகமாக வளர்ச்சியடையும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் 25 மதிப்பீடு அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் 21 மதிப்பீடும், உத்தராகண்ட் 19 மதிப்பீடும், சிக்கிம் 18 மதிப்பீடும், ஹரியானா 17 மதிப்பீடும், அசாம், திரிபுரா, பஞ்சாப் தலா 16 மதிப்பீடும், மத்தியப் பிரதேசம், ஒடிசா தலா 15 மதிப்பீடும் அதிகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032857
***
AD/PLM/AG/DL
(Release ID: 2032864)
Visitor Counter : 441