ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலத்தில் ரூ.378.68 கோடி மதிப்பீட்டில் 563.67 கிலோமீட்டர் நீளமுள்ள 78 சாலைகள், 14 பாலங்கள் கட்ட மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2024 1:47PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களில் கிராமப்புற  போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அசாம் மாநிலத்திற்கு ரூ.378.68 கோடி செலவில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 563.67 கிலோமீட்டர் நீளமுள்ள 78 சாலைகள், 14 பாலங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சமூக-பொருளாதார நிலை மேம்படுவதோடு, தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்.

அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மேம்படும். சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை எளிதில் அணுக முடியும். வளமான வடகிழக்குப் பகுதி என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

***

(Release ID: 2032675)

PLM/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2032717) வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Assamese , Punjabi