ஊரக வளர்ச்சி அமைச்சகம்
திரிபுரா மாநிலத்தில் ரூ.114.32 கோடி செலவில் 118.756 கிலோ மீட்டர் நீளமுள்ள 42 சாலைகளை அமைக்க ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
12 JUL 2024 1:49PM by PIB Chennai
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், வடகிழக்கு பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் போக்குவரத்து மேம்பாட்டு அம்சத்தின் கீழ் 118.756 கிலோமீட்டர் நீளமுள்ள 42 சாலைகளை அமைக்க ரூ. 114.32 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் 47 பழங்குடியின பகுதிகளுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை இணைப்பு வழங்கப்படும்.
மாநிலத்தில் வாழும் பழங்குடியின குழுக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுவதோடு, தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்.
அத்துடன் அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மேம்படும். சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை எளிதில் அணுக முடியும். வளமான வடகிழக்குப் பகுதி என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
***
(Release ID: 2032676)
PLM/AG/RR
(Release ID: 2032713)
Visitor Counter : 64