கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இந்தியாவில் கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்: திரு. சர்பானந்தா சோனோவால்

Posted On: 11 JUL 2024 2:30PM by PIB Chennai

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டம் சம்மந்தப்பட்டவர்களின் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்கினார். இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பான கலங்கரை விளக்கங்கள் மற்றும் இலகு ரக கப்பல்கள் தலைமை இயக்குநரகம் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு, வரலாற்று, கலாச்சார மற்றும் இயற்கை சங்கமத்தின் இடங்களாக கலங்கரை விளக்கங்களின் தனித்துவமான சுற்றுலா திறனை வெளிப்படுத்துவதற்கான கருத்துரு மற்றும் உத்தியை நோக்கமாகக் கொண்டது.

"2024 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 5,00,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கங்களுக்கு வருகை தந்தனர், இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வை கடல் கட்டமைப்புகளை துடிப்பான சுற்றுலா மையங்களாக மாற்றும் அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது" என்று திரு சோனோவால் தெரிவித்தார். விழிஞ்ஞத்தில் புதிய ஒலி ஒளிக் காட்சி மற்றும்  பிற வசதிகள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளைக் கருத்தில் கொண்டு  உருவாக்கப்படும்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு அணுகுமுறையால் வழிநடத்தப்பட்ட இந்த சந்திப்பு, கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்தவது, இந்தக் கட்டமைப்புகளை துடிப்பான சுற்றுலா தலங்களாக புனரமைப்பது போன்ற  அரசின் உறுதிப்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று திரு சோனோவால் கூறினார்.

 "பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் கடற்கரையின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும் வழிவகுக்க கலங்கரை விளக்கங்களுக்கு புத்துயிர் அளிக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. தனித்துவமான ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியுடன் விழிஞ்ஞம் கலங்கரை விளக்கத்தை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான மேலும் பல  நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியாக இந்த பங்குதாரர்கள் சந்திப்பு அமைந்தது”, என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

***

(Release ID: 2032381)

LKS/BR/RR



(Release ID: 2032632) Visitor Counter : 8