வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மேகாலயா, அசாம் மாநிலங்களில் தமது பயணத்தை நாளை தொடங்குகிறார்

प्रविष्टि तिथि: 11 JUL 2024 6:17PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா 2024 ஜூலை 12 முதல் ஜூலை 13 வரை ஷில்லாங் (மேகாலயா) மற்றும் குவஹாத்தி (அசாம்) ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.

2024, ஜூலை 12 அன்று, ஷில்லாங்கின் நோங்கிரிம் ஹில்ஸில் உள்ள வடகிழக்கு கவுன்சில் செயலகத்தில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை, வடகிழக்கு கவுன்சில், மாநில அரசு அதிகாரிகளுடன் பிராந்தியத்தில் பல்வேறு திட்டங்கள்,  முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார்

2024, ஜூலை 13 அன்று, அசாம் மாநிலம் குவஹாத்தியில் தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான வழிவகைகள் குறித்து அதிகாரிகளுடன் திரு சிந்தியா ஆலோசிக்க உள்ளார்.

மேகாலயா, அசாம்  மாநிலங்களில் பயணம் மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள திரு ஜோதிராதித்ய சிந்தியா, வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சி தங்களது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032503

******* 

IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2032558) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी , Hindi_MP , Bengali-TR , Assamese , Manipuri