ரெயில்வே அமைச்சகம்
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உதவும் வகையிலான கையேடுகள் வெளியீடு
Posted On:
09 JUL 2024 8:50PM by PIB Chennai
புதிய குற்றவியல் சட்டங்களான இந்திய நீதிச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவை குறித்த கையேடுகளை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா புதுதில்லியில் வெளியிட்டார்.
இந்தக் கையேடுகள் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) பணியாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப ரயில்வே துறையில் சட்ட செயல்பாடுகளை இந்தக் கையேடுகள் எடுத்துரைக்கின்றன.
ஆர்பிஎஃப் பணியாளர்களின் சட்டத் திறனை மேம்படுத்துவதற்கும், மாற்றியமைக்கப்பட்ட சட்டங்கள் தொடர்பாக அவர்கள் தெரிந்து கொள்வதற்கும் இந்தக் கையேடுகள் பயனளிக்கும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை இயக்குநர் தெரிவித்தார்.
அச்சிடப்பட்ட கையேடுகள் தவிர, டிஜிட்டல் வடிவில் மின் புத்தகங்களாகவும் இந்தக் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. மூன்று சட்டங்கள் தொடர்பான கையேடுகளின் டிஜிட்டல் பதிப்புக்கான இணைய தள இணைப்புகள்:
- https://jrrpfa.indianrailways.gov.in/assets/resource/BNS_LAPTOP/mobile.html
2) https://jrrpfa.indianrailways.gov.in/assets/resource/BNSS_HANDBOOK_LAPTOP/mobile.html
3) https://jrrpfa.indianrailways.gov.in/assets/resource/BSA_LAPTOP/mobile.html
***
(Release ID: 2031920)
SMB/PLM/AG/KR
(Release ID: 2032098)
Visitor Counter : 58