பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு குறித்து பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

Posted On: 09 JUL 2024 7:44PM by PIB Chennai

நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களுக்கு ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறை, பயனாளிகளை அடையாளம் காணவும், சரிபார்ப்பதற்கும் உதவுகிறது.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்திற்கு முன்நிபந்தனையாக பயோமெட்ரிக் அங்கீகாரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தின் போது நடத்தப்பட்ட முகாம்களில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட  எண்ணிக்கையிலான பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்புகள்  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் சமையல் எரிவாயு முகாம்களின் ஒரு பகுதியாக அங்கீகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நுகர்வோரின் அங்கீகாரத்தை உறுதிசெய்ய பெட்ரோலிய அமைச்சகம்,  பயனாளிகளின் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கான பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செயல்முறைகளை எண்ணெய் நிறுவனங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டப் பயனாளிகளில் 55 சதவீத்த்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்கள் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை உறுதி செய்துள்ளனர். பயோமெட்ரிக் அங்கீகாரம் மேற்கொள்ளாத நுகர்வோருக்கு எந்த சேவையும் நிறுத்தப்படவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக எந்தவொரு உதவிக்கும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 2333 555  என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID: 2031879)

SMB/PLM/AG/KR


(Release ID: 2032095) Visitor Counter : 68