சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராக பேராசிரியர் சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

प्रविष्टि तिथि: 09 JUL 2024 7:22PM by PIB Chennai

பேராசிரியர் (டாக்டர்) சவுமியா சுவாமிநாதன், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராக பொதுநல அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் (டாக்டர்) சவுமியா சுவாமிநாதன் திட்ட இலக்குகளை அடைவதற்கான ஒட்டுமொத்த உத்திகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவார். கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் உகந்த விளைவுகளுக்கு தேவையான திருத்தங்களை அவர் பரிந்துரைப்பார். ஆராய்ச்சி உத்தி குறித்து ஆலோசனையையும் அவர் வழங்குவார். உலகளவில் சிறந்த திறமைகளைக் கொண்ட நிபுணர் குழுக்களை உருவாக்குவதற்கும் அவர் உதவுவார். கூடுதலாக, திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதில் மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அதிகாரிகள், மேம்பாட்டு கூட்டாளர்களுக்கு அவர் ஆதரவளிப்பார்.

பேராசிரியர் சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இதற்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

****

PKV/KPG/DL


(रिलीज़ आईडी: 2031889) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Bengali