தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்கள்: ட்ராய் அறிவிப்பு

Posted On: 08 JUL 2024 7:03PM by PIB Chennai

ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அறிவித்துள்ளது.  

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு 'மின்னணு நிரல் வழிகாட்டியில் சேனல்களை பட்டியலிடுதல் மற்றும் டி.டி. டிஷ் தளத்தை மேம்படுத்துதல்' குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டது. இந்தத் திருத்தங்கள், சில உட்பிரிவுகளைத் தவிர, அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.

கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல்மயமாக்கலுக்கு இணங்க, 2017 மார்ச் 3 அன்று ஒலிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ட்ராய் வெளியிட்டது. ஒலிபரப்பு சூழலியலின் தேவைக்கேற்பவும், 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட திருத்தங்கள் மூலம் பங்குதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் இந்த கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது.

ஒலிபரப்பாளர்கள், எம்.எஸ்.ஓ.க்கள், டி.டி.எச் இயக்குனர்கள் மற்றும் எல்.சி.ஓக்கள் போன்ற பங்குதாரர்கள் அவ்வப்போது ஆணையத்தின் பரிசீலனைக்காக பிரச்சினைகளை முன்னெடுத்தனர்.

சேவை வழங்குநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கி  ஒழுங்குமுறை விதிகளை எளிமைப்படுத்துவதன் மூலம் எளிதாக தொழில் செய்வதை ஊக்குவித்தல் இந்தத் திருத்தங்களின் முதன்மை நோக்கமாகும். 

கூடுதல் விவரங்களுக்கு, ட்ராய் ஆலோசகர் (பி &சி.எஸ்) திரு தீபக் சர்மாவை advbcs-2@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது  +91-11-20907774  என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID:2031606)

PKV/BR/KR


(Release ID: 2031675) Visitor Counter : 59