சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்முவில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா பார்வையிட்டார்

Posted On: 07 JUL 2024 9:21PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா ஜம்முவின் விஜய்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) இன்று வருகை தந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நட்டா, "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுகாதாரம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையும் அபரிமிதமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது" என்று கூறினார். "திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீரில் விரிவான வளர்ச்சியின் புதிய அலையைக் கொண்டு வந்துள்ளார். மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி முன்னேற்றியுள்ளார்" என்று அவர் கூறினார்.

மருத்துவ அறிவியலின் பல்வேறு பிரிவுகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பது முக்கியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தினார். அலோபதி மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இரண்டும் தனித்துவமான முக்கியத்துவத்தையும் வலிமையையும் கொண்டுள்ளன என்றும், சுகாதார விளைவுகளை மேம்படுத்த ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன என்றும் அவர் கூறினார்.

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை, எண்ணற்ற தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகளை உள்ளடக்கிய ஒரு நிறுவனம் ஆகும். இது ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல், லே, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் போன்ற பிற அண்டை மாநிலங்களுக்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்றார் அவர். லட்சக்கணக்கானோருக்கு சிறந்த சுகாதார அணுகலை உறுதி செய்வதற்கு நிறுவனத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதாக அவர் உறுதியளித்தார். தன்னலமின்மை, அர்ப்பணிப்பு, திறன், ஒருமைப்பாடு, புதுமை, நம்பிக்கை ஆகியவற்றின் கலவையாக இருக்கும் எய்ம்ஸ் கலாச்சாரத்தை உருவாக்க ஆசிரியர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

***

PKV/BR/KR

Release id: 2031453

 


(Release ID: 2031490) Visitor Counter : 55