பிரதமர் அலுவலகம்

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 06 JUL 2024 10:19AM by PIB Chennai

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:

"தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

***

PLM/KV



(Release ID: 2031227) Visitor Counter : 16