பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தில் தீர்வு காணப்பட்ட சில குறைகள் குறித்த விவரம்

Posted On: 05 JUL 2024 5:27PM by PIB Chennai

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, அதன் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதியர்களின் குறைகளை சரியான நேரத்திலும் சிறந்த முறையிலும் தீர்ப்பதற்கான ஒரு மாத கால இயக்கத்தை 2024 ஜூலை 1 தொடங்கி 31 வரை நடத்துகிறது. இந்த இயக்கத்தை மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2024 ஜூலை 1 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கம் தற்போது வேகம் பெற்றுள்ளது. இதில் வெற்றிகரமாக தீர்வுகாணப்பட்ட சில முக்கிய நேர்வுகள் வருமாறு:

*சாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) படைப்பிரிவைச் சேர்ந்த மறைந்த பெமா தமாங்கின் குடும்பத்தினருக்கு 2010-ம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இது தொடர்பான குறைகள் தீர்வுகாணப்பட்டு, ரூ.20.92 லட்சம் நிலுவைத் தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

*திருமதி ஃபுல்மதி தேவி என்பவர் 2011-ல் தனது கணவரை இழந்தார், அவருக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், 6 மற்றும் 7-வது மத்திய ஓய்வூதிய அளவின்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்த சிறப்பு இயக்கத்தின் போது இது தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டு அவருக்கு ஊதியமும் ரூ.16.30 லட்சம் நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டதுடன் ஓய்வூதியத்தில் திருத்தமும் செய்யப்பட்டது.

*ரயில்வே அமைச்சகத்தில் இருந்து குடும்ப ஓய்வூதியம் பெற்ற திருமதி சுசீலா தேவியின் குறைகள் 7 ஆண்டுகளுக்குப் பின் தீர்க்கப்பட்டு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

* ராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த ராம் கிருபால் சிங்கின் குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் நிலுவைத் தொகையுடன் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

----

SMB/PLM/KPG/DL



(Release ID: 2031110) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Kannada