ஜல்சக்தி அமைச்சகம்

வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவில் நடத்தப்படும் இயக்கத்துடன் மத்திய குடிநீர், துப்புரவுத்துறை இணைந்துள்ளது

Posted On: 05 JUL 2024 12:50PM by PIB Chennai

வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்த தேசிய அளவில் நடத்தப்படும் இயக்கத்துடன் மத்திய குடிநீர், துப்புரவுத்துறை, ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவையும் கைகோர்த்துள்ளன.  இந்த இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா, கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்தக் கூட்டு இணைவின் முக்கியத்துவம் பற்றி கருத்து தெரிவித்த ஜல்சக்தி அமைச்சர் திரு சி.ஆர். பாட்டில், கிராமப்புற சுகாதார இயக்கமும், வயிற்றுப் போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கான தேசிய இயக்கமும், பொது சுகாதாரத்திற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன என்றார். இந்தக் கூட்டு முயற்சி, குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைக்கப்படுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.

2024 ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த இயக்கத்தின் போது, ஊரகப் பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர், துப்புரவு பற்றிய விழிப்புணர்வு இயக்கத்தை மத்திய குடிநீர், துப்பரவுத்துறை நடத்தும்.

இந்த இயக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் நீரின் தரம் குறித்த சோதனை நடத்தப்படுவதோடு பாதுகாப்பான நீர் குறித்த பயிலரங்குகளும் நடத்தப்படும்.

மூன்றாவது, நான்காவது வாரங்களில் சோப்பைப் பயன்படுத்தி கைகழுவுதலை உறுதி செய்தல், ஊரகப் பகுதிகளில் தூய்மைக்கான இயக்கத்தை நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

ஐந்தாவது, ஆறாவது வாரங்களில் பள்ளிகள்,  அங்கன்வாடி மையங்களில் தண்ணீரின் தரம் பற்றி ஆய்வு செய்தல், ஊரகப் பகுதி நிறுவனங்களில் கழிப்பறைகள் செயல்படாமையை ஆய்வு செய்தல் ஆகியவை இடம் பெறும்.

ஏழாவது, எட்டாவது வாரங்களில் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பை அதிகப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள் மற்றும் சமூகத் தூய்மை வளாகம் ஆகியவற்றுக்கான சிறப்பு இயக்கத்தை நடத்துதல் ஆகியவை இடம் பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030923

*** 

SMB/KPG/RR



(Release ID: 2030983) Visitor Counter : 12