சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்டம், நீதி, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பாக பணியாற்றிய 39 சிபிஐ அதிகாரிகள்/ அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

Posted On: 04 JUL 2024 3:29PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ அகாடமியில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய புலனாய்வு அமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில், மத்திய சட்டம், நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், இந்திய காவல்துறை பதக்கம் ஆகியவற்றை 39 சிபிஐ அதிகாரிகள் / அலுவலர்களுக்கு வழங்கினார். பதக்கம் வென்றவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்திய திரு மேக்வால், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய சேவையை அங்கீகரிப்பது நம் அனைவருக்கும் பெருமையான தருணம் என்று கூறினார். இது அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் தங்கள் பணியில் சிறந்து விளங்க உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் அவர் கூறினார். சிபிஐயின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், சிபிஐயின் முக்கியத்துவம் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது மட்டுமல்லாமல், அதன் புலனாய்வும் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார். இது அதிகளவில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் சிபிஐ விசாரித்த வழக்குகள் முக்கியப் பங்காற்றியுள்ளதா அவர் கூறினார். சிபிஐ சிறந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படுவது சரியானது என்று திரு மேக்வால் குறிப்பிட்டார். இது பல்வேறு தரப்பினரால் அவ்வப்போது சிக்கலான, முக்கியமான வழக்குகளில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் பிரதிபலிப்பதாக  அவர் தெரிவித்தார்.

2024, ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பேசிய திரு மேக்வால், இந்தச் சட்டங்கள் குடிமக்களின் வாழ்க்கையை பெரிய அளவில் எளிதாக்கும் என்று உறுதிபடக் கூறினார். இந்தச் சட்டங்கள் நீதி வழங்குவதை விரைவுபடுத்துவதோடு, வழக்குகளுக்காக செலவிடப்படும் நேரம் சேமிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா அண்மையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியதை குறிப்பிட்ட அவர், நீதித்துறை நடைமுறைகளில் சீர்திருத்தங்கள், மேம்பாடுகள், எதிர்வரும் சில ஆண்டுகளில் இந்தியாவை 3-வது இடத்திற்கு முன்னேற்றும் முயற்சி, இலக்குக்கு பங்களிக்கும் என்று திரு அர்ஜூன் ராம் மேக்வால் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030690

-------------

PKV/IR/RS/RR/DL



(Release ID: 2030784) Visitor Counter : 24