இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் ரோஹன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் இரண்டு ஏடிபி தொடர்களில் பங்கேற்க அனுமதி

Posted On: 04 JUL 2024 3:01PM by PIB Chennai

டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவின் கோரிக்கையை ஏற்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடும்  ஸ்ரீராம் பாலாஜியுடன் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இரண்டு ஏடிபி தொடர்களில் பங்கேற்க இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.

 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக  ஹம்பர்க், உமாக் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஏடிபி 500 போட்டித் தொடர்களில் ரோஹன் போபண்ணா. ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் தங்களுடைய பயிற்சியாளர், இயன்முறை மருத்துவருடன் பங்கேற்கவுள்ளனர்.


துப்பாக்கி சுடும் வீரர்களான ரிதம் சங்வான், சரப்ஜோத் சிங், விஜய்வீர், அனிஷ் பன்வாலா ஆகியோர் வோல்மரேஞ்சில் நடைபெறும் ஒலிம்பிக் பயிற்சி முகாம், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்கான செலவுகளுக்கு உதவி கோரிய கோரிக்கைகளுக்கும், ஒலிம்பிக் பிரிவு ஒப்புதல் அளித்தது. ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டத்தின் கீழ், அவர்களுடைய  விமானப் பயணக்கட்டணம், தங்குமிடம், விசா, உள்ளூர் போக்குவரத்து  செலவுகள் அடங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030675

---------------

PKV/IR/RS/RR

IR/RS/RR



(Release ID: 2030714) Visitor Counter : 15