நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-25 ரபி சந்தைப்பருவத்தில் இந்திய உணவுக் கழகம் 266 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்துள்ளது

Posted On: 03 JUL 2024 6:29PM by PIB Chennai

2024-25 ரபி சந்தைப்பருவத்தில் இந்திய உணவுக் கழகம் 266 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பின், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 61 லட்சம் கோடி ரூபாய்  நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2024-25 ரபி சந்தைப் பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2275 என மத்திய அரசு அறிவித்தது. போதிய அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு இருப்பது பொது விநியோக முறைக்குத் தேவையான உணவு தானியங்களை சீராக வழங்குவதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகத்துக்கு உதவியாக இருக்கும்.  பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் உட்பட  பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 184 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதற்கு இந்தக் கொள்முதல நடைமுறை முக்கியமானதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2030483

***

SMB/RS/DL


(Release ID: 2030519) Visitor Counter : 85