மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2024-25-ம் ஆண்டுக்கான, என்எம்எம்எஸ்எஸ் திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தை தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
02 JUL 2024 3:53PM by PIB Chennai
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், மாணவர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைனில் ஓடிஆர் (ஒருமுறை பதிவு) விண்ணப்பம் பதிவை அனுமதிப்பதற்கும், பொதுமக்கள் நேரடியாக அணுகுவதற்குமான மறுவடிவமைக்கப்பட்ட புதிய செல்போன் செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு முறை பதிவு உள்ளிட்ட தேசிய கல்வி உதவித்தொகை இணையதள விண்ணப்பம், துல்லியமான தொழில்நுட்பத்தில், மேம்படுத்தப்பட்ட பயனாளர் இடைமுகமாக உள்ளது. இந்த இணையதளம், புதிதாக கல்வி உதவித்தொகை கோருவோர் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஒரு முறை பதிவு செய்வதற்கு திறக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பதிவு எண், ஆதார் அடிப்படையிலான 14 இலக்க தனித்துவ எண்ணாகும். இந்தப் பதிவெண் இருந்தால் தான், தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, ஓடிஆர் எண்ணை பெற்றுள்ள மாணவர்கள், அடுத்த கட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030218
***
MM/RS/RR
(Release ID: 2030235)
Visitor Counter : 80