மத்திய பணியாளர் தேர்வாணையம்
2024 குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வின் முடிவை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
Posted On:
01 JUL 2024 7:40PM by PIB Chennai
கடந்த 16.06.2024 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சி பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2024-க்கு தகுதி பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு விதிகளின்படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2024-க்காக விரிவான விண்ணப்பப் படிவம்-1 (டி.ஏ.எஃப்-1)-இல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.
குடிமைப்பணித் தேர்வு 2024 மற்றும் இந்திய வன சேவை தேர்வு 2024 ஆகியவற்றின் இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை https://upsc.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வர்கள், புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை அணுகி, கூடுதல் தகவல்களைத் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030090
***
MM/BR/RR
(Release ID: 2030170)
Visitor Counter : 81