பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கடந்த 9 ஆண்டுகளில் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது: ஹர்தீப் எஸ் பூரி
Posted On:
01 JUL 2024 1:45PM by PIB Chennai
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், இருவார கால தூய்மைப் பணி 2024-ன் தொடக்க நிகழ்ச்சி சாஸ்திரி பவனில் இன்று தொடங்கப்பட்டது. அப்போது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் செயின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு ஹர்தீப் சிங் பூரி, தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இருவார கால தூய்மைப்பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தமது அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தூய்மைப் பணியை ஊக்கப்படுத்த மேற்கொள்ளப்படும் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளில் தூய்மைப் இந்தியா இயக்கத்தின் கீழ், ஊரக, நகர்ப்புற பகுதிகளில் சுமார் 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தப்பட்டதன் மூலம், சுகாதாரம் மற்றும் தூய்மை நடைமுறைகளில் ஒட்டுமொத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். சிறந்த சுகாதார, தூய்மைப் பணிகள் மூலம், வீடுகளில் ரூ.50 ஆயிரம் வரை சேமிக்கப்பட்டதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது என்று திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029961
***
SMB/IR/RS/RR
(Release ID: 2030005)
Visitor Counter : 76