கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
திரு சர்பானந்தா சோனாவால் திப்ருகர் மக்களவைத் தொகுதியில் வெள்ள நிலைமைகளை ஆய்வு செய்தார்
Posted On:
30 JUN 2024 7:47PM by PIB Chennai
அசாம் மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதியிலும் திப்ருகர் நகரிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் ஆய்வு செய்தார். வாழ்வாதாரத்தில் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அவர் எடுத்துரைத்தார். வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
அசாம் மாநில தேயிலைத் தோட்டப் பழங்குடியினர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு சஞ்சய் கிஷன், உணவு மற்றும் குடிமைப் பொருள் விநியோகத்துறை அமைச்சர் திரு ரஞ்சீத் குமார் தாஸ் ஆகியோரை சந்தித்து மத்திய அமைச்சர் திரு சோனாவால் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை, வெள்ளப் பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளது என்றும், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் அவசரகால நடவடிக்கைகளை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கும், நிவாரணம் தேவைப்படுவோருக்கும், நிவாரணப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகளை செய்து தருமாறு அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
----
(Release ID: 2029765)
SMB/KPG/RR
(Release ID: 2029936)
Visitor Counter : 60