சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஒருங்கிணைந்த சுகாதார செயல்பாடுகளுக்கான சட்டப்பூர்வ சூழல் மதிப்பீடு குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று புதுதில்லியில் தொடங்கியது

Posted On: 27 JUN 2024 3:03PM by PIB Chennai

இந்தியாவில் ஒருங்கிணைந்த சுகாதார செயல்பாடுகளுக்கான சட்டப்பூர்வ சூழல் மதிப்பீடு குறித்த இரண்டு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று புதுதில்லியில் தொடங்கியது.   இதனைத் தொடங்கிவைத்துப் பேசிய நித்தி ஆயோகின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத்பால், ஒருங்கிணைந்த சுகாதார முன்முயற்சி அமலாக்கத்திற்கு ஆதரவு அளித்து வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வக் கட்டமைப்பை உருவாக்குவதில் பல நாடுகளுக்கு இடையே இந்தியா முன்னிலையில் உள்ளது. இது இந்தத் துறையில் இந்தியாவின் முன்னேறிய சிந்தனையையும் தலைமைத்துவத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது.  விலங்குகள் மூலமான நோய்கள், மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் குறித்து நமது கவனத்தை ஈர்க்க கொவிட்-19 கட்டாயப்படுத்தியது என்றார்.

நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை, உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால்  ஏற்படும் சுகாதார சவால்கள் முக்கியமானவை என்று குறிப்பிட்ட டாக்டர் வினோத் பால், மனித சுகாதாரம், விலங்கின சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தடைகளை முறியடிக்க விரிவான பலதுறை அணுகுமுறை தேவைப்படுகிறது என்றார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்த இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் இதனை நமது நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்துக்காகவும் நாம் முன் நிறுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வச் சந்திரா, சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன் சட்டம் மற்றும் நீதித்துறைச் செயலாளர் திரு ராஜீவ் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சட்டப்பூர்வ கட்டமைப்புப் பற்றி மதிப்பீடு செய்தல், பலதுறை பேச்சுவார்த்தையை வலுப்படுத்துதல், செயல்பாட்டுக்குரிய பரிந்துரைகளை உருவாக்குதல், துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028993

----

SMB/KPG/DL


(Release ID: 2029173) Visitor Counter : 77