பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவத்தின் டி-5 மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 27 JUN 2024 2:35PM by PIB Chennai

இந்திய ராணுவத்தின் டி-5 மோட்டார் சைக்கிள் பயணத்தை புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திலிருந்து ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று தொடங்கிவைத்தார். 1999-ம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 25-வது ஆண்டினை நினைவுகூரும் வகையில், இந்தப் பயணத்தை இந்திய ராணுவம் நடத்துகிறது.

இந்த நிகழ்வில், ராணுவ துணைத்தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி, ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், கார்கில் போர் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயணத்தைத் தொடங்கிவைப்பதற்கு முன், ராணுவ தலைமைத் தளபதி பயணக் குழுவினருடன் கலந்துரையாடியதுடன் குழுத்தலைவரிடம் கொடியை ஒப்படைத்தார். ராணுவ வீரர்களின் மனைவியர் நல சங்கத்தின் தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டே, இந்த நிகழ்வின் போது வீரநங்கைகளைப் பாராட்டினார்.

நாட்டின் கிழக்கு, மேற்கு, தெற்கு, முனைகளிலிருந்து 2024 ஜூன் 12 அன்று நாடு முழுவதற்குமான மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்கியது. வடக்குப் பகுதியிலிருந்து தில்லியில் இந்தப் பயணம் நேற்றும் இன்றும் தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக்  காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028988

*** 

SMB/KPG/DL


(रिलीज़ आईडी: 2029135) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP