சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் எதிர்ப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு
Posted On:
26 JUN 2024 12:19PM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதி "போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்" அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இன்று (ஜூன் 26, 2024) புதுதில்லி, டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் 20.06.2024 முதல் 26.06.2024 வரை அமைச்சகம் ஒரு வார கால ஆன்லைன் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது. கட்டுரை எழுதும் போட்டி, போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறைக்கு யோகா, தியானம் மற்றும் நினைவாற்றலை ஊக்குவித்தல், போதைப் பொருள் தடுப்பு குறித்த சிறந்த நடைமுறைகளை காட்சிப்படுத்துதல், போதைப்பொருள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தை வழிநடத்த பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்துதல், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்ட சில நடவடிக்கைகளாகும். இந்தத் திட்டங்களின் மூலம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இதனை மக்கள் இயக்கமாக மாற்றி நாடு முழுவதும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பேரணிகள், கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், உறுதிமொழி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் / நிகழ்வுகளை நடத்துவதற்கு / ஏற்பாடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர, இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய சமூகப் பாதுகாப்புக் கழகம், 2024 ஜூன் 24 முதல் 28 வரை நேரடி வினாடி வினா, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நிபுணர்கள், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாட்டில் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாகும், இது போதைப்பொருள் துஷ்பிரயோகம் தடுப்பு, பிரச்சினையின் அளவை மதிப்பீடு, தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை மற்றும் பயனர்களின் மறுவாழ்வு, தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கிறது.
போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறு என்பது நாட்டின் சமூகத் துணியை மோசமாக பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எந்தவொரு போதைப்பொருளையும் சார்ந்திருப்பது தனிநபரின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பம் மற்றும் முழு சமூகத்தையும் சீர்குலைக்கிறது. சில பொருள் கலவைகள் நரம்பியல்-மனநல கோளாறுகள், இருதய நோய்கள், அத்துடன் விபத்துக்கள், தற்கொலைகள் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சார்பு ஒரு உளவியல்-சமூக-மருத்துவ பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டும்.
***
PKV/AG/KV
(Release ID: 2028751)
Visitor Counter : 491