குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தின நிகழ்ச்சிக்கு 2024 ஜூன் 27 அன்று மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி தலைமை வகிக்கவுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUN 2024 6:24PM by PIB Chennai

மத்திய குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி உத்யாமி பாரத்  என்ற குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்  தின நிகழ்ச்சிக்கு 2024 ஜூன் 27 அன்று தலைமை வகிக்கவுள்ளர்புதுதில்லியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, கொள்கை வகுப்பாளர்கள்நிதி நிறுவனங்கள் மற்றும்  இந்த தொழில் துறையைச் சார்ந்தவர்களை இணைக்கும். இத்துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இந்த நிகழ்வில்குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு  தொடர்பாக நான்கு அமர்வுகள் இடம்பெறும்.

மத்திய குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ஷோபா கரந்தலஜேசட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்துக்கும்கோவாஆந்திரப் பிரதேசம்மகாராஷ்டிரா மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக் கொள்ளப்படும்.

***

PLM/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2028613) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Punjabi